ஸ்ரீ விநாயகர் துதி
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் — கோலஞ்செய்
துங்௧க் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
ஸ்ரீ முருகன் துதி
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே— ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் யான்.
|
 |
ஸ்ரீ அம்மன் துதி
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
ஸ்ரீ சிவன் துதி்
அன்புசிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
|