|
ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம், சிங்கப்பூர்
SRI RUTHRA KALIAMMAN TEMPLE, SINGAPORE |
|
ஸ்ரீ ருத்ர காளியம்மனின் திருவருள் தங்களுக்குக் கிடைப்பதாக
MAY YOU RECEIVE BLESSINGS OF SRI RUTHRA KALIAMMAN |
|
சூரிய உதயம், சூரிய மறைவு, இராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை பற்றிய விபரங்கள் அறிய கீழே குறிப்பிட்ட மாதத்தில் ‘க்ளிக்’ செய்யவும். |
Click on the month for details applicable to Singapore on Daily SUNRISE, SUNSET, RAAGUKAALAM, YEMAKANDAM and GULIKAI |
| ஏப்/Apr 08 | மே/May 08 | ஜூன்/Jun 08 | ஜூலை/Jul 08 | ஆக/Aug 08 | செப்/Sep 08 | அக்/Oct 08 |
| நவ/Nov 08 | டிச/Dec 08 | ஜன/Jan 09 | பெப்/Feb 09 | மார்/Mar 09 | ஏப்/Apr 09 |
| இராகு காலம், எமகண்டம், குளிகை சிங்கப்பூர் நேரத்துக்குத்தக மாற்றியமைக்கப் பட்டவை |
RAAGU KAALAM, YEMAKANDAM, GULIKAI Modified according to Singapore time |
| தினமும் சூரியஉதயத்திற்கும் சூரியமறைவிற்கும் இடைப்பட்ட பகல் வேளை எட்டுக் காலப்பகுதிகளாகப் பகுக்கப்படுகின்றது. இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற (பூமத்திய ரேகைக்கு அண்மையில் உள்ள) நாடுகளில் ஒவ்வொரு காலப்பகுதியும் சுமார் ஒன்றரை மணி ஆகும். பகல் வேளை சரியாகப் பன்னிரண்டு மணித்தியாலங்களாக இல்லாததால் காலப்பகுதி ஒவ்வொன்றும் சரியாக ஒன்றரை மணித்தியாலங்கள் அல்ல என்பது கவனிக்க வேண்டியது. இந்த எட்டுக்காலப் பகுதிகளுள் மூன்று காலப் பகுதிகள் அசட்டைசெய்ய முடியாதவை எனக் கருதப்படுகின்றன. அவையாவன இராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை. இராகு காலம் மற்றும் எமகண்டம் எந்தவொரு நல்ல காரியத்தையும் மேற்கொள்ள விலக்கப்பட வேண்டியவை. குளிகை இவற்றைப்போல் அல்லாது சில காரியங்களுக்காக மட்டுமே விலக்கப்பட வேண்டியதாகும். |
The period between sunrise and sunset each day is divided into eight periods. In places like India, Malaysia and Singapore (countries situated near Equator) each period, or kaalam, lasts approximately one and one-half hours, not exactly one and one-half hours, depending on the total duration of sunlight which is not exactly 12 hours on any day. Three of the eight kaalams are considered most important. They are Raagu kaalam, Yemakandam and Gulikai. They depend on the times of sunrise and sunset of the day. They are not fixed times based on the day of the week as claimed in some indian calendars. Raagukaalam and Yemakandam are considered malefic for commencing new undertakings. Gulikai is also malefic but less malefic than Raagukaalam and Yemakandam. |
| இராகு காலம், எமகண்டம், குளிகை அந்தந்த நாளின் சூரிய உதயம் சூரிய மறைவு நேரங்களைப் பொறுத்திருப்பன. தமிழ்நாட்டு நாட் காட்டிகளில் காணப்படும் நேரங்கள் தினமும் சூரிய உதயம் காலை 06:00 மணியெனவும் சூரிய மறைவு மாலை 06:00 மணியெனவும் தப்பாகக் கொண்டு கணிக்கப்பட்டவை. பஞசாங்கங்களில் உள்ள குறிப்பு, அதாவது சூரிய உதயம் காலை 6:00 மணிக்கு முந்தினால் (பிந்தினால்) அவ்வாறுள்ள நேர வித்தியாசத்தை பஞ்சாங்கத்தில் தரப்பட்டிருக்கும் இராகு காலம், எமகண்டம், குளிகை ஆரம்ப நேரங்களிலிருந்து கழித்து (கூட்டி) சரியான ஆரம்ப நேரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது, கருத்தில் எடுக்கப் படவில்லை. இக்குறிப்பும் ஒரு வகையில் சரியானதல்ல. சூரிய உதய நேரத்துடன் குறிப்பிட்ட நாளன்றுள்ள பகல்வேளையின் கால அளவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை ஒவ்வொன்றினதும் கால அளவு பகல் வேளையின் (இது சிங்கப்பூரில் 12 மணித்தியாலங்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும்) எட்டில் ஒரு பகுதியாகும். |
Raagukaalam, Yemakandam and Gulikai vary from place to place, changing every day. The times shown in Tamil Nadu calendars are based on the wrong assumption that sunrise is at 06:00 am and sunset is at 06:00 pm. It is important to take note of the remarks found in Panchangams that if the sunrise is later (earlier) than 6:00 am then the minutes that have lapsed after (remaining to) 6:00 am should be added (subtracted) in order to ascertain the correct times. Even this correction is not right. The corrections suggested in panchangams assume that duration of daytime is 12 hours exactly which is not the case in most places most of the days. Raagukaalam, Yemakandam and Gulikai depend for their start and finish not only on the time of sunrise at a particular place, but also on the duration of daylight hours on the relevant day. Duration of each of Raagukaalam, Yemakandam and Gulikai is one eighth of the daylight hours (which is longer than 12 hours in Singapore). |
| தமிழ்நாட்டு நாட்காட்டிகளில் காணப்படும் நேரங்கள் சரியானவை என எடுத்துக்கொண்டு சிங்கப்பூரில் சூரிய உதயம் காலை 07:00 மணியெனவும் சூரிய மறைவு மாலை 07:00 மணியெனவும் தப்பாகக் கருத்திற்கொண்டு கணிக்கப்பட்ட இராகு காலம், எமகண்டம், குளிகை நேரங்களே சிங்கப்பூரில் கிடைக்கப்பெறும் பெரும்பாலான பிரசுரங்களில் காணப்படுபவை. இவை தப்பானவையே. |
The times found in some publications in Singapore are the changes made to times found in the Tamil Nadu calendars based on the assumption that sunrise in Singapore is at 7:00 am and sunset at 7:00 pm. These changes conform partially with the notes found in panchangams. The changes made reflect the differences in the assumptions of times of sunrise and sunset. These times of sunrise and sunset are not the correct times on the daily basis. |
| சிங்கப்பூரின் வடக்கு அசஷாம்சம் (North Latitude) 1o 17’ கிழக்கு ரேகாம்சம் (East Longitude) 103o 51’. இவற்றைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூருக்கான சூரியஉதயம் மற்றும் சூரியமறைவு நேரங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வசித்து ஆண்டுக்கான மிகச் சரியான இராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை நேர காலப் பிரிவுகள் (அனைவரும் எளிதாகப் பயன் படுத்தும் வகையில் 24 மணிநேர கடிகார அடிப்படையில் மிகத் துல்லியமாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. |
Singapore’s Latitude is 1o 17' N and Longitude is 103o 51' E. Based on these, times of sunrise and sunset, correct periods of Raagukaalam, Yemakandam and Gulikai during the Sarvajit Tamil Year applicable to Singapore are given in the table forms. The times shown in the tables are based on 24 hour clock. |